Skip to main content

'சோழத்தின் பெருமைகூற சொல் பூத்து நிக்கும்'-வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல்!

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

'Cholam's Perumaikola Sol Boothu Nithum' - First Song from Ponni's Selvan Released!

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

 

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடலான 'பொன்னி நதி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் பகிர்ந்திருந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள 'பொன்னி நதி' என்ற முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரஜினிகாந்துடன் என்னுடைய முதல் படம்” - ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி

ar rahman wishes muthu team for re release

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. 

 இந்த நிலையில் இப்படம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ரீ ரிலீஸாகியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்த நிலையில் ரீ ரிலீஸ் குறித்து ஏ.ஆர் ரஹ்மான் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரஜினிகாந்த் சாருடன் என்னுடைய முதல் படம். 4கே மற்றும் 5.1 தரத்துடன் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியிடப்படுகிறது. வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சர்வதேச திரைப்படத்திற்கு இசையமைக்கும் கதீஜா ரஹ்மான்

 

Khatija Rahman Makes International Composing Debut with ‘Lioness'

 

பிரபல இசையமைப்பாளரின் ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். இவர் 'புதிய மனிதா...' (எந்திரன்), 'காயம்...' (இரவின் நிழல்), 'சின்னஞ்சிறு...' (பொன்னியின் செல்வன் 2) உள்ளிட்ட பாடல்களில் பாடியுள்ளார். இதையடுத்து ஹலிதா ஷமீம் இயக்கி வரும் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கடந்த மாதம் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. 

 

ad

 

இந்த நிலையில் பிரிட்டன் - இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஆகியோர் இதில் நடிக்கவுள்ளார்கள். பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இயக்கவுள்ள இப்படத்தை இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர் . 

 

இந்த படம் இரு பெண்கள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோபியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர். இவரது வாழ்வையொட்டிய கதை ஒரு பகுதியாகவும் 1990-களில் புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு பற்றிய கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் தற்போது கோவாவில் நடந்து வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் மூலம் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மான்.