/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/000001_2.jpg)
கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்த சம்பவம் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்-தனலட்சுமி தம்பதியினர். கடந்த 26 ஆம் தேதி மணிகண்டன் தனது விவசாய நிலத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மதிய உணவு தயார் செய்யுமாறு மனைவியான தனலட்சுமியிடம் கூறியுள்ளார். மதிய உணவிற்காகத் தனலட்சுமி சாதம் மற்றும் சாம்பார் ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் தனலட்சுமியின் ஒன்றரை வயதுக் குழந்தை கிருபாஸ்ரீ; அவரது அம்மாவான தனலட்சுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தாய் தனலட்சுமிசெய்து வைத்திருந்த கொதிக்கும் சாம்பாரில் குழந்தை விழுந்துள்ளது. உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகப் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருபா ஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)