தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட பகுதிகளில் குழந்தை திருமணம் நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் அதிகாரிகள் இதுதொடர்பாக புகார் வந்த இடங்களில் தீவிர ஆய்வு செய்தனர். அதன் ஒரு பகுதியாக அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் அவரது மகளை குழந்தை திருமணம் செய்துகொடுத்துள்ளதை கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக அவரும், விஜய பாலன் தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டத்தைக் கண்டித்து சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் செய்தனர். அவர்களை அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் இன்று கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.