சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக அண்மையில் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக அண்மையில் சர்ச்சை வெடித்தது. குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, திருமணம் நடைபெற்றதாக பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஓராண்டாகவே இந்த விவகாரம் வெடித்து வந்த நிலையில் ஆளுநரின் பேச்சையடுத்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் சிதம்பரம் பகுதியில் முகாம் இட்டு விசாரணையில் ஈடுபட்டு வந்தார். அதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.