Skip to main content

விஷவண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Chief Minister M.K.Stalin financial assistance to the family of the person

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80 - ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த செண்டாய் என்பவர் மகன் வீரமணி என்பவர் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருக்கும் போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் தாக்கி காயமடைந்தார், இதையடுத்து திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று (02.09.2023) காலை உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

 

உயிரிழந்த வீரமணியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
cm stalin who started the excavation work

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டைகளில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தலம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர். 

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் கி.பி. 2 அல்லது 3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்லில், கோட்டைத் தலைவன் கணங்குமரன் ஆநிரைபூசலில் இறந்த தகவலை சொல்லும் நடுகல் என்பது தெரிய வந்தது. இதன் பிறகு பல்வேறு ஆய்வாளர்களின் வருகையை தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நீதிமன்றம் மூலம் அகழாய்வுக்கான உத்தரவும் பெறப்பட்டது.

cm stalin who started the excavation work

தொடர்ந்து 2021 ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக 2022-2023 ம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குனராக கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், செங்கல், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடுசெங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

cm stalin who started the excavation work

இந்த நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய் கிழமை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, மக்கள் பிரநிதிகள், உள்ளாட்சி பிரதிநிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படும் என்ற கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட குழிகள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கிடைத்துள்ள பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

cm stalin who started the excavation work

தற்போது நீர்வாவி குளத்தின் தென்மேற்கு கரைப் பகுதியில் உள்ள மேடான பகுதிகளில் அகழாய்வு செய்ய பணிகள் தொடங்கியுள்ளது. இதே போல மேலும் சில இடங்களையும் ஆய்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அகழாய்வு நடக்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.

Next Story

வெடிவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Mannargudi tk Bamani Village Velanguzhi incident CM MK Stalin obituary

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருத்தநாகபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலை விஜய செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானதாகும். இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் இங்கு நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இந்த ஆலையில் நேற்று (16.06.2024) மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது ஆலையில் மூன்று பேர் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஆலையில் பணியில் ஈடுபட்டு சதீஷ்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mannargudi tk Bamani Village Velanguzhi incident CM MK Stalin obituary

இந்நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (16-06-2024) பிற்பகல் 1.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மனோகரன் என்பவர் மகன் சதீஷ்குமார் (வயது 34) பலத்த தீக்காயங்களுடன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.