Skip to main content

அரசுப் பேருந்தில் திடீரென ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (படங்கள்) 

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

 

சென்னையில் மாநகர அரசு பேருந்தில் திடீரென ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலவசப் பயணத்திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் கேட்டறிந்தார். 

 

சென்னை, கண்ணகி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள கரோனா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23/10/2021) நேரில் ஆய்வு செய்தார். தடுப்பூசிப் போடும் பணிகள் தொடர்பாக, ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் கேட்டறிந்தார். 

 

இதனையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்த M- 19B மாநகர பேருந்தில் திடீரென ஏறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வு செய்தார். பேருந்தில் இருந்த பெண்களிடம் இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது, தங்களது கோரிக்கைகளையும் சில பயணிகள் முன் வைத்தனர். பின்னர் பேருந்தில் இருந்த சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்