Published on 21/11/2022 | Edited on 21/11/2022

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (21/11/2022) முதுமை காரணமாக மறைவெய்திய திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸின் இல்லத்திற்கு நேரில் சென்று உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடன் சென்றனர்.