/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cswefcd_22.jpg)
வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலின் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அன்றைய தினம் டெல்லியில் உள்ள இல்லத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றித் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் அழைப்பு விடுக்க இயலாத நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் முதலமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் கூறுகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)