


Published on 24/08/2022 | Edited on 24/08/2022
ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்கள் நலத் திட்டங்கள், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பது எனத் தொடர்ந்து தமிழகம் முழுக்க சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க மூன்று நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதில் முதல் நாள் பயணமாக நிறைவேறிய திட்டங்களைத் துவக்கி வைக்கவும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் கோவை சென்றுள்ளார். அங்கு முதற்கட்டமாக உக்கடம் பெரிய குளம் பகுதியில் படகு சேவை திட்டத்தையும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டி.பி.சாலையில் பல வசதிகள் கொண்ட கார் பார்க்கிங் வசதியையும் துவக்கி வைக்க உள்ளார்.