சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (11/10/2021) நடந்த நிகழ்ச்சியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020இல் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீராங்கனைகள் வெ. சுபா, எஸ். தனலட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.