Skip to main content

'தமிழுக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் முதல் எதிர்க்குரல் அவருடையதுதான்'-அமைச்சர் காந்தி பேச்சு

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
'The Chief Minister is the first voice against whoever raises a question against Tamil' - Minister Gandhi speech

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செய்தார்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி தெரிவிக்கையில், 'பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் தமிழ் மொழிக்காக எவ்வாறு பாடுபட்டர்களோ அதை மிஞ்சும் அளவுக்கு தமிழக முதல்வர் செயலாற்றுவதாகவும் தமிழ் மொழிக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் அதனை முதலில் எதிர்த்து குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய திட்டங்களை அறிவித்து இந்தியாவிலேயே முன் மாதிரியான முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார்.தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை மிஞ்சும் அளவிற்கு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். விளையாட்டுத்துறை என ஒரு துறை இருந்ததே யாருக்கும் தெரியாது. தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பிறகு விளையாட்டுத்துறை தற்போது மேலோங்கி வளர்ந்துள்ளது.

திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு நடைபெற்று முடிந்திருக்கிறது' என தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்