Skip to main content

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

Chidambaram Medical College doctors, staff struggle

 

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு கடலூர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கடலூர் செவிலியர் கல்லூரி மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் கடந்த மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து மாத ஊதியம், ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கக் கோரியும், முழுமையாக அரசு கையகப்படுத்தும் அரசாணை வெளியிட வலியுறுத்தியும் மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வி.சிவகுருநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் சௌ.மனோகரன், இளங்கோ, செல்வராஜ், ரவி, ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பழனிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்ட தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பு‌  அறிவித்தது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேர் திருவிழா கோலாகலம்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Ani Thirumanjana Chariot Festival in Nataraja Temple

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.  இதில் ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு ஆனி திருமஞ்சனம் என்றும், மார்கழி மாதத்தில் நடைபெறும் விழாவிற்கு ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா ஆகும்.

இந்நிலையில் ஆனி மாதத்திற்கான ஆனித் திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்ற நிலையில்  பஞ்ச மூர்த்தி சாமி சிலைகள் வீதி உலா தினந்தோறும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 11-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை சித்சபையில் (கருவறை) இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி சாமி சிலைகள் ஊர்வலமாக கோவிலில் இருந்து பக்தர்கள் தோளில் தூக்கியவாறு எடுத்துவரப்பட்டு காலை 6 மணிக்கு தேரில் ஏற்றினார்கள்.  இதனைத் தொடர்ந்து தேர் திருவிழா காலை 8 மணிக்கு மேல் தொடங்கியது.  தேர் சிதம்பரம் நகரில் முக்கிய வீதிகளான கீழவீதி தெற்கு வீதி மேலவீதி வடக்கு வீதி வழியாக சென்று இன்று மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் தேர் நிலையை அடையும். தேர் தெருக்களில் செல்லும் போது நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தேருக்கு தல 2 கிராம் தங்கக் காசு கொடுத்து பல்வேறு தரப்பினர் மண்டகப்படி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் தேரில் இருந்து சாமி சிலைகள் இறக்கப்பட்டு பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.  இதனைத் தொடர்ந்து இரவு லட்சார்ச்சனை நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்து 4 மணிக்குள் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும்.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும். உலக நாடுகளில் இருந்தும் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

Next Story

கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Devotees are allowed to go to Kanakasabha and worship

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் உள்ள கனகசபை பகுதியில் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்த நிலையில், கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது.

இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகளும், அரசின் உத்தரவுகள் இருந்தாலும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலே பக்தர்கள் அனைவரும் கனகசபைக்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி ஜூலை 11, 12, 13 ஆகிய நாட்களில் பூஜை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பக்தர்களுக்கு கனகசபை மீது ஏறி வழிபாடு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

The website encountered an unexpected error. Please try again later.