/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1427.jpg)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் இராம.கதிரேசன் பதவி ஏற்றுள்ளார். இவருக்கு பேராசிரியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் இராம. கதிரேசன் புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மைத் துறைத் தலைவராகவும் மற்றும் பேராசிரியராகவும் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர். புதிய துணைவேந்தராக பதவியேற்றுள்ள கதிரேசனுக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வநாராயணன், தொலைதூர கல்வி இயக்கக இயக்குனர் சிங்காரவேல், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி சம்பத் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இவர் தற்போது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராக உள்ளார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை தமிழக அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு நியமிக்கப்படும் 3வது துணை வேந்தராவர். முன்னதாக துணைவேந்தர் கதிரேசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்கலைக் கழக நிறுவனர் அண்ணாமலை செட்டியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)