Skip to main content

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் கைதான பாஜக பிரமுகர்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

chennai villivakkam bjp executive school student related incident 
பாலச்சந்திரன்

 

சென்னை வில்லிவாக்கம் அருகில் நேற்று முன்தினம் இரவு, பள்ளி மாணவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் இருந்து அழுதபடி இறங்கி உள்ளான். அப்போது அங்கு இருந்தவர்கள் அந்த மாணவனிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுவன், ‘நான் லிஃப்ட் கேட்டு ஒருவர் வண்டியில் வில்லிவாக்கத்தில் ஏறினேன். பின்னர் அங்கிருந்து அவர் வண்டியில் என்னை ஏற்றிக் கொண்டு கிளம்பியவர் பாடி மேம்பாலம் அருகே உள்ள இருட்டான பகுதியில் வண்டியை நிறுத்தினார். பின்னர் என்னிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்’ என அழுது கொண்டே கூறி உள்ளான்.

 

மாணவன் இவ்வாறு கூறியதை அருகில் இருந்தவர்கள் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த விடீயோவை அங்கு இருந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சிறுவனை பைக்கில் அழைத்து வந்தவரிடம் அங்கு இருந்தவர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கு அந்த நபர் எதுவும் கூறாமல் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். இதையடுத்து  அவர் ஓட்டி வந்த வண்டியை சோதனை செய்தபோது, அந்த வண்டியில் பாஜக கட்சியின் கொடி, துண்டு மற்றும் பாஜக  உறுப்பினர் அடையாள அட்டை இருந்தது. அந்த அடையாள அட்டையில் அம்பத்தூர் பகுதி பாஜக பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் என்று குறிப்பிட்டு அதில் பாலச்சந்திரன் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த வீடியோவானது  சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே மிக வேகமாக பொதுமக்கள் மத்தியில் பரவி வந்தது. இதனையடுத்து, சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவி வருவதை அடிப்படையாக வைத்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். மேலும் பள்ளி மாணவனின் தாய் நேற்று போலீசில் இது குறித்து புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்தரை (வயது 47) பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய மரணம்; உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
counterfeiting liquor; The death toll rises to 43

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 43 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 50 க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

தற்காலிக சபாநாயகர் நியமனம்; காங்கிரஸ் எதிர்ப்பு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Appointment of Temporary Speaker; Opposition to Congress

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் குறித்த உத்தரவை இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேநேரம் தற்காலிக சபாநாயகர் நியமனத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நாடாளுமன்ற விதிகளை பாஜக மீதியுள்ளது என தெரிவித்துள்ள காங்கிரஸ், சபாநாயகர் தேர்தலுக்கு முன் மூத்த எம்.பி தான் அவைக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது விதி. 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடி குன்னிலை நியமிக்கவில்லை. தற்காலிக சபாநாயகராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தப்  ஏழு முறை மட்டுமே எம்.பியாக இருந்தவர் என காங்கிரஸ் விமர்சனத்தை வைத்துள்ளது.