chennai t.nagar jewellery gold, diamonds police investigation

Advertisment

சென்னையில் நகைக்கடை ஒன்றில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும்வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாகக் காணப்படும் தியாகராய நகர் பகுதியில், உள்ள மூசாதெருவில், 'உத்தம்' நகைக்கடை15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் மொத்த விற்பனை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், இந்த நகைக் கடையில்ரூபாய் 2 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

நகைக்கடையின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து 4.125 கிலோ தங்க நகைகள், 15 தங்க நகைக்கட்டி, 15 வெள்ளிக்கட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக, நகைக்கடை உரிமையாளர்கள் மூன்று பேர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த கொள்ளை சம்பவம் தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.