Published on 22/10/2019 | Edited on 22/10/2019
ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். ஆணைய நடவடிக்கைகளை வாய்மொழியாக தெரிவிக்க விரும்பாததால் கவரில் தாக்கல் செய்தததாக விளக்கம். தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 30- ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.