கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை பட்டம் படிப்பு படித்து வந்தார். இவர், கடந்த சனிக்கிழமை அன்று தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குகள் முடிந்தது. இதன் பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர்தான் காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.
அந்த செல்போன் பதிவில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்த நிலையில் இன்று இளைஞர் அணி காங்கிரஸ் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.