இன்று காலை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்துசெய்யக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள் கூறிய சில முக்கிய கருத்துகள்...
மக்கள் நல அரசு என்ற முறையில் விவசாயம் பொதுநலனை காக்க வேண்டும். கண்மூடிக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. திட்டங்களை அமல்படுத்தும் முன் சுற்றுச்சூழல் ஒப்புதல் எவ்வளவு அவசியமோ அதுபோல் மக்கள் கருத்தும் அவசியம். 8 வழிச்சாலை திட்டத்தை எப்படியாவது செயல்படுத்திவிட மாநில அரசு அவசரம் காட்டியுள்ளது.
சாலைக்கு அனுமதி அளித்தால் அரியவகை மரங்கள், பறவைகள், விலங்குகள் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. நீர்நிலைகள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராயாமல் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. வனப்பகுதி வழியாக சாலை அமைத்தால் விலங்குகளால் ஏற்படும் தீமைகளுக்கு மனிதர்களே பொறுப்பு. ஏற்கனவே இரண்டு முக்கிய மலை சுற்றுலா தலங்கள் ஆக்கிரப்பு மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 8 வழிச்சாலை திட்டத்தை ஆய்வு செய்த தனியார் நிறுவனம் அளித்த அறிக்கையில் நிறைய தவறுகள் இருப்பதாகக்கூறி அந்த அறிக்கையை ரத்து செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.