
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 5 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் திறப்பு அதிகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 22.69 அடி அளவுக்கு நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செம்பரம்பாக்கத்தில் திறந்துவிடப்பட்ட நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெருகம்பாக்கம் பகுதியில் ஓடிய ஏரி உபரி நீரில், கார் ஒன்று அடித்துக்கொண்டு ஓடியது.இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)