Skip to main content

21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

nn

 

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், விருத்தாசலம், தருமபுரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

 

அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதே போல் தருமபுரி, அரூர், வள்ளிமதுரை, கௌகம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பொழிந்து வருகிறது. கடலூரை பொறுத்தவரை பெண்ணாடம், விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Holiday notification for schools and colleges

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக இன்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

 

அதே சமயம் 'மிக்ஜாம்' புயல் காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (4.12.2023) இன்றும் (5.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் நாளை (06.12.2023) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னையை விட்டு விலகிய புயல்; சில மணி நேரத்தில் மின்சார சேவை

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

 Storm left Chennai; Electricity service within hours

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 170 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது. சென்னையில் இருந்து வடகிழக்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இப்புயல் இன்று முற்பகல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி ஆறு மணி நேரமாக 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன. புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ள நிலையில், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த சில மணி  நேரங்களில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்