தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிளவக்கல்- 5 செண்டிமீட்டர் மழையும், தென்காசி- 4 செண்டிமீட்டர் மழையும், ஆரணி, பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் தலா 3 செண்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.