Chance of rain in many districts in next 3 hours

வரும் 5 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில்அடுத்து மூன்று மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலத்தில் ஒருசில இடங்களிலும், அதேபோல் தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூரில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம், கடற்கரை சாலை, உப்பளம், காமராஜ் நகரில் மழை பொழிந்தது.