தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 23 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (08.10.2024) இரவு 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே போன்று கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.