Skip to main content

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Chance of rain in 22 districts

 

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை என 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னையில் பரவலாக மழை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
nn

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர், மதுரவாயில், போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதியில் பலத்த மழை பொழிந்து வருகிறது.

Next Story

அடுத்த 3 மணி நேரத்தில் மழை; 5 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
nn

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, திண்டுக்கல், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.