தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.