Skip to main content

மத்திய பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் குளறுபடி; மாணவர்கள் வேதனை! 

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

Central university entrance exam issue

 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் தமிழில் நுழைவுத் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் தமிழில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை வேந்தர் கூறியிருப்பது மாணவர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

 

இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஒரே நேரத்தில் 590 மையங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் 22 மையங்களிலும் 5 தினங்களுக்கு நடைபெறுகிறது. இந்தாண்டு, முதல் முறையாக அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 30 மையங்களில் இன்று நுழைவுத் தேர்வுகள் தொடங்கி காலை, மாலை என நடைபெற்றுவருகிறது.

 

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலை மற்றும் மாலை நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் மாணவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி தமிழில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வெளியாகி உள்ளது.

 

இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் போன்ற தேர்வுகளைத் தமிழ் வழியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள் ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களோ, "தமிழ்வழியில் நுழைவுத் தேர்வு எழுதும் வகையில் தயார்ப்படுத்தி வந்தோம். ஆனால் ஆங்கிலத்தில் கேள்வித்தாளால் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே தமிழில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்," என தெரிவித்தனர்.

 

இதேபோல் பெற்றோர்களும், "பிள்ளைகளுக்கு தமிழில் தேர்வு நடத்த வேண்டும்," என்றனர்.

 

Central university entrance exam issue

 

இது குறித்துப் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் கூறிய போது, "நுழைவுத் தேர்வுக்கான மேலிடப் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளார்கள். அவர்கள் நுழைவுத் தேர்வில் நடைபெற்ற அனைத்துக் குளறுபடிகளையும் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாரதிதாசன் பல்கலை. நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு; மாணவர்கள் அவதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ph.D Online Entrance Test conducted by Bharathidasan University Technical disorder

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவியர் தேர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் புகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் ஐடி(ID) மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ,மாணவியர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாக் இன் செய்தனர். ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

பின்னர் தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

Next Story

“அமைச்சருக்கே தெரியாமல் எப்படி அரசாணை வெளி வந்தது?” - ஜெயக்குமார் கேள்வி 

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

jeyakumar question raised for model school entrance exam related 

 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசும்போது, "திமுகவினர் நீட் நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே வேளையில் அரசு மாதிரி பள்ளிகளில் நுழைவுத் தேர்வை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கே தெரியாமல் இதற்கான அரசாணைகள் வெளிவந்துள்ளன.

 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவருக்கான வேலையையும், அவர் புகழ் பாடும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார். இதனை விட்டு விட்டு அவர் பள்ளிக் கல்வித் துறையில் கவனம் செலுத்துங்கள். இதனைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏறக்குறைய 22 மாதங்களில் எவ்வளவு குளறுபடி நடந்துள்ளன. பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்து இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக நிர்வாகத் திறமை இல்லாமல் இருக்கிறது. கீழ் நிலையில் இன்னைக்கு என்ன நடக்கிறது என்று அமைச்சருக்கு தெரியாமல் இருக்கிறது. கையெழுத்து இடாமல் எப்படி அரசாணை வெளியாகும். நானும் அமைச்சராக இருந்திருக்கிறேன்.  அமைச்சரும், முதலமைச்சரும் கையெழுத்து போட்டால் தான் அரசாணை வெளியாகும். அப்படி இருக்கும் போது  தனது துறையில் என்ன நடக்கிறது என்று அமைச்சருக்கு தெரியவில்லை.

 

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு 2022 ஆகஸ்ட் மாதம் 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான முடிவு முதலில் செப்டம்பர் மாதம் வெளியிடுவோம் என்றனர், பிறகு அக்டோபர் மாதம் வெளியிடுவோம் என்றனர். தற்போது 5வது முறையாக இப்போது வெளியாகும் என்கிறார்கள். தேர்வு முடிவானது வரும் ஆனால் வராது. அதிமுக ஆட்சியின் போது 13 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கினோம்.  அதற்கான முடிவு 2 மாதத்தில் வெளி வந்தது. ஆனால் தற்போது நிர்வாகத் திறமை இல்லாமல் குரூப் 2 தேர்வைக் கூட சரியாக நடத்த தெரியவில்லை. தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டு இருக்கிறது." என்றார்.