Skip to main content

துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி; கல்பாக்கத்தில் பரபரப்பு!

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
Central Industrial Security Force man incident at kalpakkam

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் (CISF) 3 ஷிப்ட்கள் அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரான ரவி கிரண் (வயது 37) என்பவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரவி கிரண் இரவு பணி முடிந்து சக வீரர்களுடன் பேருந்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது பேருந்து வேகத்தடையின் மீது ஏறி இறங்கியுள்ளது. அச்சமயத்தில் ரவி கிரண் கொண்டு வந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்தது. இதனால் துப்பாக்கியில் இருந்த துப்பாக்கி குண்டு ரவி கிரண் கழுத்தின் வலது பக்கத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து ரவி கிரண் உடல் பேருந்தில் கொண்டு வரப்பட்டு கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனை வளாகத்தில் வைத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய மரணம்; கருக்காகுறிச்சிக்குள் நுழைந்த போலீஸ் - தொடரும் சோதனை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Police raid illegal spirit sale in Karukkakurichi

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்யைில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. 

இந்தச் சம்பவத்தையடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி சப்டிவிசனில் உள்ள கருக்காகுறிச்சி கிராமத்தில் தொடர்ந்து பலர் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை போலிசார் அடிக்கடி சோதனைகள் செய்து ஊறல் பானைகள் உடைத்தாலும் தொடர்ந்து ஊறல் போடப்பட்டு சாராயம் காய்ச்சி வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், இன்று காலை கூடுதல் போலிஸ் சூபபிரண்டு சுப்பையா தலைமையில் தனிப்படை போலிசார் கருக்காகுறிச்சி கிராமத்தில் சுமார் 25 நபர்களின் பெயர் பட்டியலுடன் ஊருக்குள் நுழைந்துள்ளனர். அதே போல மாவட்டத்தின் பல இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; உயிரிழப்பு 16 ஆக உயர்வு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் விவரம்: சுரேஷ், பிரவீன், மற்றொரு சுரேஷ், தனக்கொடி, வடிவு, சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, டேவிட்.