Skip to main content

எடப்பாடியை காப்பாற்ற களத்தில் இறங்கிய கலெக்டர் குடும்பம்: மத்திய அரசு கண்டிப்பு

Published on 03/08/2018 | Edited on 06/08/2018
CBI


எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தின் கலெக்டராக இருப்பவர் ரோகினி. இவரது கணவர் விஜேந்திர பிதாரி. காவல்துறை எஸ்.பி.யாக இருந்த இவர் மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஈடுபட்டவர்களை கடுமையாக தாக்கினார். இதனால் அவர் தமிழ்நாட்டில் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்டார்.
 

தற்போது அவர் பெங்களூருவில் சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் ரோகினியை தொடர்புகொண்டு, தனது மகன் மிதுன் மற்றும் சம்மந்தி சுப்பிரமணி ஆகிய இரண்டு பேர் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய்களை புதிய இரண்டாயிரமாக வைத்திருந்ததாக ஒரு வழக்கு உள்ளது. விஜேந்திர பிதாரி மூலமாக அந்த வழக்கில் இருந்து தனது மகனையும், சம்மந்தியையும் விடுவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
 

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இந்த தகவல் பரவ, மத்திய சிபிஐ அதுபோன்ற எந்த விஷயங்திலும் தலையிடக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளது.  

 

 


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை; ‘சிபிஐ விசாரிக்க வேண்டும்’ - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
CBI should investigate Edappadi Palaniswami insists

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பெரம்பூர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு வீட்டிற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்ததோடு ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அன்புமணி ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

CBI should investigate Edappadi Palaniswami insists

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “நண்பர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு செய்தி கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அவ்வாறு ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டுமென்றால், சிபிஐ விசாரணை தேவை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டால்தான் நேர்மையாக விசாரணை நடக்கும். தமிழ்நாட்டில் பெரிய தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும். சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி, எனத் தொடர்ந்து பல பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 

CBI should investigate Edappadi Palaniswami insists

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லையென ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தாரும், கட்சி நிர்வாகிகளும் சந்தேகிக்கின்றனர். எனவே உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான சிசிடிவி காட்சியை பார்க்கும்போது அரசு எடுத்த நடவடிக்கை முரணாக உள்ளது” எனத் தெரிவித்தார். 

Next Story

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
NEET exam question paper leak School owner arrested in Gujarat

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது. இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்க்கண்டில்  உள்ள பள்ளி ஒன்றின் முதல்வர் அசானுல் ஹக், அப்பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.