Skip to main content

தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது-திமுக எம்.பி அண்ணாதுரை பேட்டி

Published on 13/09/2020 | Edited on 13/09/2020
 Central government is ignoring Tamil Nadu - DMK MP Annathurai interview

 

திருவண்ணாமலை நகரம் ஆன்மீகத்தின் முக்கியமான நகரம். அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலம் வர தினமும் ஆயிரக்கணக்கிலும், பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரை மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நகரில் உள்ள ரயில் நிலையம் சரியான வசதிகள் இல்லாமல் உள்ளது.

இதுப்பற்றி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சி.என்.அண்ணாதுரை கவனத்துக்கு பொதுமக்கள் பலர் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு இரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அங்குள்ள குறைபாடுகளை அறிந்துக்கொண்டார். இது தொடர்பாக கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்றத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த 2.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இரயில்வே நிர்வாகம் ஒப்புதல் தந்துள்ளது. இந்நிலையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இரயில்வே அதிகாரிகளுடன் செப்டம்பர் 12ந் தேதி ரயில் நிலையத்தில் ஆலோசனை நடத்தி, தன் கருத்துக்களை தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும். திண்டிவனம் டூ திருவண்ணாமலைக்கு ரயில் பாதை இயக்க வேண்டும், ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மத்தியரசிடம் வலியுறுத்தி வந்தேன். அதனைத் தொடர்ந்து ரயில்நிலையத்தில் கழிப்பறை, குடிநீர்வசதி, மின்விளக்குகள், நடைபாதை நீட்டித்து தருதல், பயணிகள் தங்கும் விடுதிகள், பெயர்பலகை, ரயில் நிலையத்தில் மேற்கூரை போன்றவற்றை செய்ய தற்போது முதல்கட்டமாக நிதி ஒதுக்க நிர்வாக அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த நிதியை வேகமாக ஒதுக்கி, பணிகள் செய்ய வலியுறுத்துவேன்.

அதோடு, விழுப்புரம் டூ காட்பாடி இடையே ஒருபாதை தான் உள்ளது. அதனைத் இரட்டை பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன், அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திண்டிவனம் டூ திருவண்ணாமலை ரயில்பாதை அமைக்க 1,200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. இன்னமும் நிதி ஒதுக்கவில்லை. கிருஷ்ணகிரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து தொடங்கி முடிக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். அமைச்சரை சந்தித்தும் முறையிட்டுள்ளேன். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இதுக்குறித்து பேசவுள்ளேன்.

தமிழகத்தை பொறுத்தவரை மத்தியரசு புறக்கணிக்கிறது. தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்தியரசு முக்கியத்துவம் தருவதில்லை. பல பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது என்றார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
The sun can never be hidden Chief Minister M.K. Stalin

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. அதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே வேளையில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 26 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 479 வாக்குகளும் பெற்றனர். 

The sun can never be hidden Chief Minister M.K. Stalin

இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி உறுதியான நிலையில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். அங்குத் திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

இந்நிலையில் விக்கரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்றையும் அப்பதிவில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இடைத்தேர்தல் முடிவுகள்; இந்தியா கூட்டணி அபார வெற்றி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
by election results India alliance is a huge success

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. இந்நிலையில் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

The website encountered an unexpected error. Please try again later.