
தமிழ்நாட்டில் மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னை பிஎஸ்ஜி அறக்கட்டளை, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் அறக்கட்டளை, ஈரோடு வாய்க்கால் மேட்டில் நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு தற்போது அனுமதியளித்துள்ளது.