Skip to main content

சத்தியில் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Census of elephants started in Sathyamangalam

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதில் மொத்தம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பத்து வனச்சரகங்களும் சேர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வன ஊழியர்களைக் கொண்டு கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆறு பேர் கொண்ட குழு கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியது. முதல் நாளான இன்று நேர்கோட்டு பாதையிலும், இரண்டாவது நாளில் யானைகள் வழித்தடத்தையும், மூன்றாவது நாளில் யானைகள் பிளாக் கணக்கெடுக்கும் பணியும் நடக்கின்றது. இது தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் வனப்பகுதியில் நடப்பு ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி என வனத்துறை அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்