Skip to main content

1500 கிலோ அரிசி, 1000 கிலோ ஆட்டிறைச்சி...; மக்களுக்கு பிரியாணி வழங்கிய இஸ்லாமியர்கள்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Celebrating Milad Nabi by feeding people

 

நபிகள் நாயகம் பிறந்தநாள் மிலாடி நபி விழாவில் இஸ்லாமிய மக்கள் 1500 கிலோ அரிசி மற்றும் 1000கிலோ ஆட்டிறைச்சி  கொண்டு உணவு சமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர் அன்னதானம் வழங்கினர்.

 

வேலூர் மாவட்டம், வேலூர் சார்பனாமேடு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்கள் தொடர் அன்னதானம் வழங்குவார்கள். அதே போல் இந்த ஆண்டும் 1500 கிலோ அரிசி மற்றும் சுமார் 1000 கிலோ ஆட்டுக் கறிகளை கொண்டு அசைவ உணவு சமைத்து சாதி மத பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள்.

 

மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர். மக்கள் பசியாற உணவளித்து மிலாடி நபி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியம் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் மணல் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்கள் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

இந்த விபத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாகக் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்