கள்ளக்காதல் மோகத்தால், அஜய், கார்னிகா ஆகிய தன் இரண்டு குழந்தைகளையும், பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, கணவனையும் கொலை செய்வதற்காகக் காத்திருந்து, அவர் வராத நிலையில், குன்றத்தூர் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி, தற்போது கன்னியாகுமரி போலீசாரிடம் பிடிபட்டிருக்கிறார் அபிராமி.
கள்ளக்காதலன் சுந்தரம் போட்டுக்கொடுத்த பிளான் பிரகாரம், கன்னியாகுமரிக்கு தப்பிச் செல்வதற்காக, தன்னுடைய ரோஸ் கலர் டி.வி.எஸ். ஸ்கூட்டியில் (டி.என்.85 சி 9360), 31-ஆம் தேதி பிற்பகல் 4-42 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து, பார்க்கிங் ஏரியாவில், அபிராமி டூ வீலரை நிறுத்திய காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த வருத்தமோ, பதற்றமோ, கவலையோ, பயமோ எதுவும் அபிராமியின் முகத்தில் காணப்படவில்லை. தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை ஸ்டைலாக தலைக்கு ஏற்றிவிட்டு, சென்னை பாணியில் சிகப்பு துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு, ஹெட்-செட்டில் பாட்டு கேட்டபடியே, ஹாயாக கோயம்பேடு பேருந்து நிலையம் வருகிறார். உள்ளே நுழையும் வழியும், வெளியே செல்லும் வழியும் வேறு என்பதால், அவர் வெளியேறும் காட்சி பதிவாகவில்லை.
கன்னியாகுமரியில் சிக்கியபோது, உதட்டுக்கு லிப்ஸ்டிக் தடவி, ஜாலி மூடில் இருந்த அபிராமியைப் பார்த்து, “ச்சே… நீயும் ஒரு பொம்பளயா?” என்று வெறுத்துப்போய் திட்டியிருக்கிறார்கள் காக்கிகள். உல்லாச வாழ்க்கை பறிபோய், சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாலும், விசாரணையில் கடுமை காட்டியதாலும், அபிராமியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. மற்றபடி, ‘கல் நெஞ்சக்காரி’ என்ற வார்த்தைக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான ஆள் இந்த அபிராமிதான் என்கிறது காக்கிகள் வட்டாரம்.
விசாரணையின் போது, 30-ஆம் தேதி இரவே கணவன் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்ததாகவும், விஷத்தில் வீரியம் குறைவாக இருந்ததால், மகள் கார்னிகா மட்டும் இறந்து, மகன் அஜய்யும் கணவன் விஜய்யும் பிழைத்துக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கும் அபிராமி “விடிந்ததும், இறந்துபோன மகளைத் தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்று சொல்லி விஜய்யை சமாளித்தேன். விஜய் வங்கிப் பணிக்குக் கிளம்பியதும், மகன் அஜய்க்கு மீண்டும் பாலில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தேன். அதன்பிறகு, வீட்டிலிருந்து கள்ளக்காதலன் சுந்தரத்தைப் பார்க்கப் போனேன். அங்கிருந்து, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து, பஸ்ஸில் கன்னியாகுமரி வந்தடைந்தேன்.” என்று கூறியிருக்கிறாள்.
‘பெண்ணே! நீயும் பெண்ணா?’ இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது.