Skip to main content

பாத்திமா லத்தீப் மரணத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி! -மாணவர்களின் தற்கொலைக்கு நிரந்தரத் தீர்வு காண அறிவுறுத்தல்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் அஸ்வத்தாமன்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு,  நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ‘ஏற்கனவே விசாரணைக்குழுவில் சிபிஐ அதிகாரிகள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.’ என்று கூறியதைத் தொடர்ந்து, அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  

மேலும், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்  ‘ஐஐடி நிர்வாகம், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கான சரியான நேரம் இது.’ என சில கருத்துக்களையும் தனது பரிந்துரையையும் வெளியிட்டுள்ளது.

 

 CBI probe on Fatima Latif's case dismissed Advice on permanent solution


*மாணவர்களுக்கு கற்பிப்பதுடன் நின்றுவிடாமல், சரியாகப் படிக்காத மாணவர்களை ஊக்குவித்து நன்றாகப் பயின்று சிறப்பாக தேர்ச்சியடைய வைக்கும் கடமையும் பேராசிரியர்களுக்கு உள்ளது.

*இளம் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கக்கூடிய வகையில் விரைவில் நிரந்தரத் தீர்வைக் கொண்டு வரவேண்டும்.

*சென்னை ஐஐடி மட்டுமில்லாமல்,  நாட்டில் உள்ள மற்ற ஐஐடி நிர்வாகங்களும் இத்தகைய இறப்புகளைத் தடுப்பதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும்.

*பாத்திமா லத்தீப் மரண சம்பவம் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதன் காரணமாக போராட்டத்தையும் சந்திக்க வைத்தது. அந்த அடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சிபிஐ-க்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரைக்கிறோம்.

 

 CBI probe on Fatima Latif's case dismissed Advice on permanent solution

 

*இந்த மரண சம்பவத்தில் தாக்கல் செய்யப்படும் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் குற்றப்பத்திரிக்கையில் திருப்தி அடையாவிட்டால்,  மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடலாம்.

*அனுதாபம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆனாலும், தற்போது விசாரிக்கும் சென்னை மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் தனது விசாரணை அறிக்கையை ஜனவரி 22-ல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பயணிகளின் கவனத்திற்கு’ - மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
'Attention of passengers'- change in Chennai electric train service!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் அனைத்தும் எழும்பூரில் இருந்து நாளை (14.07.2024) இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சார ரயில் பயணிகள் நலன் கருதி சென்னை கடற்கரை முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை நாளை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (14.07.2024) தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து  இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

'Attention of passengers'- change in Chennai electric train service!

பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்கப்படவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 11 பேருக்கு போலீஸ் காவல்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
BSP Armstrong incident Police custody for 11 people

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியானது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

BSP Armstrong incident Police custody for 11 people

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை சார்பில் 7 நாட்கள் நீதிமன்ற காவல் கேட்ட நிலையில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய் மற்றும் சிவசக்தி உள்ளிட்ட 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவலை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.