அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டது. இதனை எதிர்த்து அமைச்சர் ராஜகண்ணப்பன் இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வாதிடுகையில், “இந்த வழக்கில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தொடர்பில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” வாதிடப்பட்டது. இந்நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.