Case registered against former DGP

Advertisment

தமிழக முதல்வர் பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மத்திய மாவட்டவழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

அந்த புகாரில் 'இந்துகள் வாக்கு வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பொய் செய்தியை நடராஜன் வாட்ஸப் அப் குழுக்களில் பரப்பியதாகவும், முதல்வர் கூறாத ஒன்றை கூறியதாக அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை என கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.