Skip to main content

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
Case registered against AIADMK former MLA

கடந்த 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக சார்பில் சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்யா. இவர் எம்.எல்.ஏவாக இருந்த போது சட்டமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது கடந்த 2018 - 2019 ஆம் நிதி ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டடங்கள் கட்டுவதாகக் கூறி கணக்கு காட்டி 35 லட்சம் முறைகேடு செய்ததாக இவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 3 உதவிப் பொறியாளர்கள், ஒரு செயற் பொறியாளர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி 913.09.2023) அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா தமிழக வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்