Skip to main content

இபிஎஸ்க்கு எதிரான வழக்கு; தமிழக அரசு மேல்முறையீடு

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Case against EPS Government of Tamil Nadu Appeal

 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்துள்ளது.

 

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

 

அதன்படி இந்த வழக்கு விசாரணை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது,  இந்த வழக்கில் கடந்த 2018 இல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் தவறில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடுகளைக் காண முடியாது. ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்தத் தேவையில்லை, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை எனவே எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை விசாரிக்கக் கோரிய ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ராணுவம் என்பது சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல” - நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Justice SK Kaul's says army to fight enemies of the state Not to maintain law and order

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்  3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில் 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மூன்று நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “ஜம்முகாஷ்மீரில் குறைந்தபட்சம் 1980-களில் இருந்து அரசு(ராணுவம், போலீஸ்) மற்றும் அரசு சாரா அமைப்புகளால் (பயங்கரவாதி, பிரிவினைவாதி) நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை விசாரித்து, அறிக்கை வெளியிட ஒரு பாரபட்சமற்ற உண்மை மற்றும் நல்லிணக்கக் குழுவை அமைக்கவும், நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் பரிந்துரை செய்கிறேன்.

முன்னோக்கி செல்ல, காயங்கள் குணமடைய வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் செய்த தவறுகளை செயல்களை ஒப்புக்கொள்வதுதான் காயங்களைக் குணப்படுத்துவதற்கான முதல் படி. இது குறித்த வலிகளை மக்கள் உணர்கிறார்கள். ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு இணையாக, படிப்படியாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் சட்டப்பிரிவு 370ன் நோக்கம். ராணுவம் என்பது அரசின் எதிரிகளை எதிர்த்து போரிடுவதற்குதானே தவிர, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல" சட்டப்பிரிவு 370-ஐ, சட்டப்பிரிவு 367-ஐ  பயன்படுத்தி திருத்தம் செய்வது குறித்து, ஒரு நடைமுறை பரிந்துரைக்கப்படும்போது, அதைப் பின்பற்ற வேண்டும். பின்வாசல் வழியாக திருத்தம் அனுமதிக்கப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” - பிரதமர் மோடி

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Pm modi  praised the Supreme Court's verdict that Article 370 will be repealed

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்தாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதில் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில், “சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது; இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பு. நீதிமன்றம், அதன் ஆழ்ந்த ஞானத்தில், இந்தியர்களாகிய நாம், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பாகவும், போற்றவும் வைத்திருக்கும் ஒற்றுமையின் சாரத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு ஒரு போதும் மாறாது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களைச் சென்றடைவது மட்டுமல்லாமல், 370வது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.