ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு கவர்னர் ரவி சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தார். இதற்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் காணொளி மூலம் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முறையீடு செய்தார். மேலும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அவரது முறையீட்டை கேட்ட நீதிபதிகள், "மனுத்தாக்கல் செய்து அது முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும். முறையாக இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் தான் இடம்பெறும்" என்றும் தெரிவித்துள்ளனர்.