திருடிவிட்டு தப்ப முயன்றவர்கள் வாகனம் ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஆதனூர் அடுத்த ஜங்சன் பகுதியில் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டு வியாபாரி கனகராஜ் என்பவர் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக ஓரமாக காரை நிறுத்தியுள்ளார். அப்பொழுது அந்த காரை பின்தொடர்ந்து வந்த சிலர் காரில் வைக்கப்பட்டிருந்த 1.50 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றதாக கனகராஜ் புகார் அளித்தார்.
வந்தவர்கள் காவலர்கள் உடையிலிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது அதிக வேகமாக வந்த கார் ஒன்று ஆம்பூர் கடந்து சென்றபோது ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையில் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். அப்பொழுது ஆதனூர் அடுத்த எம்.எம் என்ற பகுதியில் கார் கிராமத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகி நின்றது. காரில் இருந்து தப்ப முயன்றவர்களை போலீசார் பிடித்த நிலையில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 23 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.