திருச்சி வரகநேரியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து சமயபுரம் ஈச்சம்பட்டியில் பகுதியில் சூதாட்டம் விடுதி நடத்துகிறார். இந்தப்பகுதியில் திருச்சியில் உள்ள முக்கிய பணக்காரர்களின் சொர்கபுரி போன்று பண்ணை தோட்டம், சீட்டாடம் என்று எப்போதும் கனஜோராக நடக்கும். இதை மாநகர மற்றும் மாவட்ட போலிஸ் இரண்டுமே இதை கண்டுகொள்வதில்லை. ஏன் என்றால் பலநேரங்களில் போலிஸ்காரர்கள் அனைத்து வகையான அதிகாரிகளும் விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/somasundram.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த நிலையில் சோமசுந்தரம் நடத்தும் கிளப் தினமும் சராசரியாக 40 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை புழங்கும். ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் கிளப் கட்டணமாக வசூல் செய்வார்கள். இந்தநிலையில்தான் கடந்த 28ம் தேதி சோமசுந்தரம் வீட்டிலிருந்து விடுதிக்கு காரில் டிரைவர் பாபுவுடன் புறப்பட்டார். பால்பண்ணை ரவுண்டானா அருகே காரை மறித்துஅதில் ஏறிய கும்பல் கத்திமுனையில் இரண்டு பேரையும் கடத்தி ஏர்போர்ட் கருப்பு கோயில் அருகே விட்டு சென்றனர். அப்போது சோமசுந்தரம் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காந்திமார்கெட் போலிசார் வழக்குபதிவு செய்தனர்.
போஸ்மார்டம் ரிப்போட்டில் சோமசுந்தரம் தாக்கி கொல்லவில்லை. முளை மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய் வெடித்து இறந்திருக்கிறார். ஆகவே அவர் ஏற்கனவே இரத்த கொதிப்பு நோயினால் பலவீனமாக இருந்தவரை மிரட்டி செயற்கையாகவே இந்த மரணத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடத்து கொண்டிருக்கிறது. சூதாட்டகிளப்பில் இலட்ச கணக்கில் பணம் இழந்தவர்களில் 30 பேரை தேர்வு செய்து விசாரணை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
இதேபோன்று திருச்சியில் நடுரோட்டில் தொழிலதிபர் காரை மறித்து பணம் பறித்த கும்பலை போலிஸ் கைது செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையை சேர்ந்தவர் ரகுராமன். இவர் பெரிய தொழிலதிபர் நண்பர்களுடன் காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற ரகுராமன் ஊர் திரும்பினார். திருச்சி மன்னார்புரம் அருகே வந்த மர்ம நபர்கள் திடீரென காரை மறித்தனர். ரகுராமன், அவருடைய நண்பர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த மர்ம கும்பல் தப்பியோடியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/தமிழழகன்.jpg)
தமிழழகன்
இதுபற்றி புகார் கே.கே.நகர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணையில் பணம் பறித்த கும்பல் காஜா நகர் குடிசை பகுதியை சேர்ந்த கும்பல் என்றும், அங்கிருந்த அய்யப்பன், முத்து, சதீஷ்குமார், மணி ஜாக்சன் மணி ஆகியோர் எனகண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.
இதே போன்று கடந்த சில நாட்களுக்கு அஜித் படத்திற்கு சென்ற ரசிகர் தமிழழகன் அவருடைய நண்பர்களே முன் விரோதத்தில் அடித்து கொலை செய்து ஆட்டோவில் எடுத்து சென்று எரித்தது 20 நாட்கள் கழித்துதான் தெரிந்தது அந்த அளவிற்கு திருச்சியில் கிரைம் ரேட் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)