சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த வீரா என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன், காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பொன்னேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து, கிணற்றுக்குள் விழுந்த காரையும், அதில் இருந்தவர்களையும் மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேர தேடுதல் பணிக்கு பின் காரில் இருந்த வீரா உள்பட இரண்டு பேரை உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்டனர். பின்னர், உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.