car incident in tharumapuri

Advertisment

தருமபுரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்ததில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த வீரன் என்பவர் குடும்பத்துடன் தனக்கு சொந்தமான பொலிரோ காரில் பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில் தந்தை வீரன், மகள் சுஷ்மிதா இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். மேலும், காரில் இருந்த வீரனின் மனைவி காரின் கதவு திறக்கப்பட்டதால் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் பலமணி நேரபோராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் விழுந்த காரை கிரேன் உதவியுடன் வெளியே எடுத்தனர். தந்தை, மகள் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.