Skip to main content

நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் அரசு பேருந்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Car and government bus collided head-on

 

உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ்சும் ஒரு காரும் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த எபினேசன், இமான், யுவான், ரபேக்கா ஆகியோர் ஆவர். அவரது தாய் மகன் உட்பட 6 பேர் தாம்பரத்தில் இருந்து ஊட்டிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று இரவு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் புறவழிச்சாலைப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி வழியாக சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக காருடன் நேருக்கு நேர் மோதி உள்ளது.

 

இதில் அரசு பேருந்தின் கீழ் பகுதியில் கார் சிக்கிக்கொண்டது. இதையடுத்து சிறிது தூரம் சாலையில் காரை  இழுத்துச் சென்ற அரசு பேருந்து அப்பகுதி விவசாய நிலத்தில் இருந்த 15 அடி பள்ளத்தில் இறங்கி நின்றது. பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் விபத்து நடந்ததை கண்டு அலறி சத்தம் போட்டுள்ளனர். பஸ்சில் சுமார் முப்பத்தி மூணு பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அரசு பஸ்சை சேலம் மாவட்டம் ஊனத்தூரைச் சேர்ந்த அழகுராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும் லேசான காயமடைந்த பஸ் பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர விபத்து இரவு 8 மணி அளவில்  நடந்ததால் சேலம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

dsfds

 

தியாகதுருகம் புறவழிச்சாலை பகுதியில் விபத்து நடந்துள்ள தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் தரப்பில் கூறும்போது, “கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் புறவழிச் சாலையை கடக்கும் போது இரு பகுதிகளிலும் இருந்தும் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்பதை நின்று கவனித்து பார்த்து விட்டு சாலையைக் கடந்து செல்ல வேண்டும். ஆனால் பல வாகன ஓட்டிகள் இருபுறமும் வாகனம் வருகிறதா என்பதை கவனிக்காமல் அலட்சியமாக வாகனத்தை செலுத்துவதால் இது போன்று விபத்துகள் நேர்கின்றன என்று கூறுகின்றனர்.

 

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் ஆகிய புறவழிச்சாலை பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை பகுதியில் மட்டும் நான்கு வழிச்சாலைக்கு பதிலாக இருவழி சாலையாக குறுக்கி அமைத்துள்ளதும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள். தொடரும் விபத்துக்களையும் அதன்மூலம் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தடுப்பதற்கு காவல்துறையும் நெடுஞ்சாலைத்துறையில் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.