![Candidature for urban local elections has started!](http://image.nakkheeran.in/cdn/farfuture/pVc01MLUl9zWU5XmP71twjz3nBbVWm5ihMEz-QVQlQ4/1643348380/sites/default/files/inline-images/444_0_0.jpg)
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. 649 உள்ளாட்சி அமைப்புகளில் 12,838 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (28/01/2022) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. சனிக்கிழமையான நாளையும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இன்று (28/01/2022) முதல் பிப்ரவரி 4- ஆம் தேதி மாலை 05.00 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5- ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற பிப்ரவரி 7- ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது; பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.