Bus driver tied up and barrage beated in Madurai

மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் ஒருவரைக் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்கும் ஆம்னி நிறுவனம் ஒன்று அதன் நிறுவனத்தின் ஓட்டுநர் ஒருவரை ஜன்னலில் கட்டி வைத்துத் தாக்கியுள்ளது. அந்த ஓட்டுநர் நிறுவனத்திற்குத் தெரியாமல், பயணிகளைப் பேருந்தில் ஏற்றி பணத்தை ஆன்லைன் பரிவர்தனை மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். இது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குத் தெரியவர, அந்நிறுவனத்தின் அலுவலர்களும், ஊழியர்களும் சேர்ந்து ஓட்டுநரைக் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisment

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதனிடையே போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.