/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_38.jpg)
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து இன்று காலை 7:00 மணி அளவில் புறப்பட்ட அரசு நகரப்பேருந்தானது தீரன் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியின் அருகில் பேருந்து வந்தபோது, அதை ஓட்டி வந்த மணப்பாறையைச் சேர்ந்த கணபதி (56) என்ற ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்த ஓட்டுநர்பேருந்தை நிறுத்த முடியாமல் மயங்கிய நிலையில், பேருந்து பள்ளியின் நுழைவாயில் அருகே அமைந்துள்ள டெலிபோன் கம்பத்தின் மீது மோதி அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது.
இதனை அடுத்து பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினர். மேலும் மயங்கி விழுந்த ஓட்டுநரை மீட்ட பயணிகள் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.ஆனால் அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கண்டோன்மென்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)