
சென்னை அடையாறு அருகே நடு சாலையில் பட்டப்பகலில் கார் ஒன்று குண்டு போல் வெடித்துச் சிதறி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அடையாறு பாலத்திற்கு கீழே சிக்னல் அருகே வந்த காரில் இருந்து திடீரென புகை கிளம்பியது. உடனடியாக காரில் இருந்த இருவர் இறங்கி ஓடினர். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் முடியாததால் கார் படபடவென பற்றி எரிந்தது. காரை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வந்து தீயைப் போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.