/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vizhupuram-in_15.jpg)
விழுப்புரம் மாவட்டம் அருகில் உள்ள அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி 65 வயது. இவர் நேற்று முன்தினம் தனது உறவினரை பார்ப்பதற்காக திருவண்ணாமலை சென்றுவிட்டு மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் தன் வீட்டிற்குத் திரும்பினார், அப்போது அவரது வீடு திறந்து இருந்தது.
அப்போது வீட்டிற்குள் இருந்து சில மர்ம நபர்களின் சன்னமான பேச்சுக்குரல் கேட்டுள்ளது. உடனே அவர் வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சத்தமில்லாமல் அக்கம் பக்கத்தினரை அழைத்துவந்தார். அவர்கள் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது 16 வயது சிறுவர்கள் இருவர் பீரோவில் இருந்த ரூ.32,000 பணம் மற்றும் பொருட்களைத் திருடிக் கொண்டிருந்தனர்.
இருவரையும் ஊர் மக்கள் உதவியோடு கையும் களவுமாகப் பிடித்து அனந்தபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் மூர்த்தி. அதோடு அவர் அளித்தபுகாரை ஏற்ற போலீசார், அந்த இரு சிறுவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அந்த இரு சிறுவர்களையும் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். சிறுவர்கள் மீது பெற்றோர்கள், உறவினர்கள் கவனம் செலுத்த வேண்டும். இவர்களின் முறையான கண்காணிப்பு இல்லாததே, இப்படி சிறுவர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவதற்கு காரணம்என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)