தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய் ஒன்று கடிக்க முற்பட்ட நிலையில், அச்சிறுவன் நாய்கள் தெருவில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கரூர் மாவட்டம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அதீதன் என்ற சிறுவன் கடந்த 26 ஆம் தேதி சக தோழர்களுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்று சிறுவன் அதீதனை கடிக்க முற்பட்டது. அங்கு இருந்த மற்றொரு சிறுவன் அந்த நாயை துரத்தி விட்டான். இந்த காட்சிகள் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து சிறுவன் அதீதன் தான் கைப்பட கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டு தந்தையுடன் மாவட்ட கலெக்டரிடம் மனுகொடுத்தான்.
அந்த கடிதத்தில், ''நான் அதீதன்... நாய்கள கட்டிபோடுங்க... ரொம்ப கடிக்குது.. பயமா இருக்கு மாமா...'' என எழுதப்பட்டிருந்தது.